வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சு… ஐ.டி.சி. லாபம் ரூ.3,587 கோடி.. இடைக்கால டிவிடெண்டு அறிவிப்பு

 

வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சு… ஐ.டி.சி. லாபம் ரூ.3,587 கோடி.. இடைக்கால டிவிடெண்டு அறிவிப்பு

ஐ.டி.சி. நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,587.09 கோடி ஈட்டியுள்ளது.

சிகரெட் முதல் பிஸ்கட், கோதுமை மாவு, நோட்புக் வரை பல்வேறு நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி. கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,587.09 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலண்டைக் காட்டிலும் 11.4 சதவீதம் குறைவாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் அந்நிறுவனம் லாபமாக ரூ.4,050.4 கோடி ஈட்டியிருந்தது.

வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சு… ஐ.டி.சி. லாபம் ரூ.3,587 கோடி.. இடைக்கால டிவிடெண்டு அறிவிப்பு
ஐ.டி.சி.

2020 டிசம்பர் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் ஒட்டு மொத்த செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.14,124.48 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 6.1 சதவீதம் அதிகமாகும். 2020 டிசம்பர் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் வருவாயில் 43 சதவீத பங்களிப்பை சிகரெட் வர்த்தகம் கொண்டுள்ளது. அந்த காலாண்டில் சிகரெட் வர்த்தகம் வாயிலாக ஐ.டி.சி. நிறுவனம் மொத்தம் ரூ.6,091.17 கோடி ஈட்டியுள்ளது.

வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சு… ஐ.டி.சி. லாபம் ரூ.3,587 கோடி.. இடைக்கால டிவிடெண்டு அறிவிப்பு
ஐ.டி.சி. பிராண்டுகள்

ஐ.டி.சி. நிறுவனம் இந்த நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.5 அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது ஐ.டி.சி. நிறுவன பங்கின் விலை 3.97 சதவீதம் குறைந்து ரூ.217.45ஆக இருந்தது.