இந்தியா-சீனா மோதல்கள் மிக விரைவில் அமைதியாக தீர்க்கப்படும்.. இந்தோ-திபெத்திய காவல் படை தலைவர் தகவல்

 

இந்தியா-சீனா மோதல்கள் மிக விரைவில் அமைதியாக தீர்க்கப்படும்.. இந்தோ-திபெத்திய காவல் படை தலைவர் தகவல்

கடந்த 6 மாதங்களாக எல்லையில் இந்தியா-சீனா இடையே நிலவும் மோதல்கள் மிக விரைவில் அமைதியான வழியில் தீர்க்கப்படும் என்று இந்தோ-திபெத்திய காவல்படை தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா இடையே எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க, படைகளை பின்வாங்குவது மற்றும் அனைத்து பிரிக்சன் பாயிண்டுகளிலும் ஆயுதங்களை நேரத்துக்கு உள்பட்ட முறையில் 3 கட்டங்களாக செயல்படுத்த இந்தியாவும், சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கடந்த புதன்கிழமையன்று தெரிவித்தன. இந்த சூழ்நிலையில் தற்போது இந்தியா-சீனா இடையே நிலவும் மோதல் போக்கு விரைவில் அமைதியான வழியில் தீர்க்கப்படும் என்று இந்தோ-திபெத்திய காவல்படை தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா மோதல்கள் மிக விரைவில் அமைதியாக தீர்க்கப்படும்.. இந்தோ-திபெத்திய காவல் படை தலைவர் தகவல்
எஸ்.எஸ்.தேஸ்வால்

இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதபடைகளில் ஒன்றான இந்தோ-திபெத்திய காவல் படை, இந்திய-சீன எல்லை பகுதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த படையின் இயக்குனர் ஜெனரல் எஸ்.எஸ். தேஸ்வால் செய்தி நிறுவனத்துக்கு ஒன்று பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் அவர் கூறியதாவது: எங்களது துருப்புகளுக்கு சிறப்பு குளிர்கால உடைகள் மற்றும் சத்தான உணவு வழங்கப்பட்டுள்ளதால் கிழக்கு லடாக்கின் கடுமையான குளிர்ச்சியில் தைரியமாக உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அங்கு இந்தியா மற்றும் சீன படைகள் பதட்டமான நிலையில் உள்ளன.

இந்தியா-சீனா மோதல்கள் மிக விரைவில் அமைதியாக தீர்க்கப்படும்.. இந்தோ-திபெத்திய காவல் படை தலைவர் தகவல்
இந்தோ – திபெத்திய காவல் படை வீரர்கள்

இரு தரப்பு (இந்தியா-சீனா) உறவுகளில் உள்ள விகாரங்கள் ஏற்கனவே தெளிவாக காணப்படுகின்றன. ஆனால் இவை மிக விரைவில் அமைதியாக தீர்த்து வைக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தோ திபெத்திய எல்ல உலகின் மிக உயர்ந்த சர்வதேச எல்லையாகும். ஒவ்வொரு இடமும் சுமார் 10-11 ஆயிரம் அடி உயரமும் கொண்டது. எங்கள் துருப்புகள் அனைத்தும் அந்த உயரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது, குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரை தொடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.