இங்கிலாந்தை அடக்கிய இத்தாலியின் “இரும்புக்கரம்” – 50 ஆண்டுகளுக்கு பிறகு யூரோ கோப்பையை வென்று சாதனை!

இங்கிலாந்தை அடக்கிய இத்தாலியின் “இரும்புக்கரம்” – 50 ஆண்டுகளுக்கு பிறகு யூரோ கோப்பையை வென்று சாதனை!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டிக்கு இத்தாலி, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் இத்தாலி அணி பெனால்டி ஷூட்அவுட்டில் 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

இங்கிலாந்தை அடக்கிய இத்தாலியின் “இரும்புக்கரம்” – 50 ஆண்டுகளுக்கு பிறகு யூரோ கோப்பையை வென்று சாதனை!

லண்டன் வெம்பிளி அரங்கில் நடைபெற்ற யூரோ கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் லூக் ஷா ஆட்டம் தொடங்கிய 1 நிமிடம் 57 வினாடிகளில் கோல் அடித்து இத்தாலி வீரர்களை சோதனைக்குள்ளாக்கினார். ஆட்டத்தின் முதல் பாதி முழுவதுமே 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியே முன்னிலையில் இருந்தது. இதையடுத்து இரண்டாம் பாதியில் வெறிகொண்டு ஆடிய இத்தாலி வீரர்கள் கோல் அடித்து சமன் செய்தனர்.

இங்கிலாந்தை அடக்கிய இத்தாலியின் “இரும்புக்கரம்” – 50 ஆண்டுகளுக்கு பிறகு யூரோ கோப்பையை வென்று சாதனை!

இரண்டாம் பாதியின்  67ஆவது நிமிடத்தில் இத்தாலி வீரர் போனுஸி கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டும் ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவே இல்லை. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் பெனால்டி ஷூட்அவுட் முறை பின்பற்றப்பட்டது. பெனால்டியின் முதல் வாய்ப்பில் இத்தாலி வீரர் பெரார்டியும், இங்கிலாந்து கேப்டன் கேனும் கோல் அடித்தனர். அடுத்ததாக இத்தாலி வீரர் பெலோட்டி அடித்த கோலை இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்போர்டு தடுத்துவிட்டார்.

இங்கிலாந்தை அடக்கிய இத்தாலியின் “இரும்புக்கரம்” – 50 ஆண்டுகளுக்கு பிறகு யூரோ கோப்பையை வென்று சாதனை!

அந்தப் பக்கம் இங்கிலாந்தின் மெக்குயர் கோல் அடிக்க 2-1 என்று முன்னிலை பெற்றது. ஜெயிக்க வேண்டும் என்ற வெறியுடன் 3ஆவது வாய்ப்பில் இத்தாலி வீரர் பெனுஸி கோல் அடித்தார். ஆனால் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமான ராஷ்போர்ட் கோலை அடிக்க முடியாமல் கோட்டைவிட்டார். இதனால் மீண்டு டை ஆனது. பரபரப்பான 4ஆவது வாய்பில் இத்தாலி வீரர் பெமார்டெஷி கோல் அடிக்க, இங்கிலாந்து வீரர் சான்சோ அடித்த கோலை கோல் கீப்பர் டோனாரூமா தடுத்தார்.

இங்கிலாந்தை அடக்கிய இத்தாலியின் “இரும்புக்கரம்” – 50 ஆண்டுகளுக்கு பிறகு யூரோ கோப்பையை வென்று சாதனை!
டோனரூமா

இதனால் 3-2 கடைசி வாய்ப்பில் இத்தாலி வீரர் ஜோர்ஹின்ஹோ அடித்த கோலை இங்கிலாந்து கோல் கீப்பர் தடுக்க சீட்டின் நுனிக்கு ஆட்டம் சென்றது. வெற்றியை தீர்மானிக்கக்கூடிய கடைசி வாய்ப்பில் இங்கிலாந்து அணி கோல் அடிக்காமல் போக இத்தாலி கோப்பையைக் கைப்பாற்றியது. தொடர்ந்து இங்கிலாந்து மூன்று வாய்ப்புகளைக் கோட்டைவிட்டு கோப்பை கனவை சிதைத்துக்கொண்டது. இதற்குக் காரணமானவர் இத்தாலி கோல்கீப்பர் டோனாரூமா தான். அவர் தான் நேற்றைய போட்டியின் ஹீரோ. இத்தாலிக்கு 50 ஆண்டுகள் கழித்து கோப்பையைப் பெற்றுத்தந்த தூதன்.