வளிமண்டல மேலடுக்கில் சுழற்சியால் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!

வளிமண்டல மேலடுக்கில் சுழற்சியால் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கில் சுழற்சியால் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!

தென் தமிழகம் , டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வடக்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது.என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கில் சுழற்சியால் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!

பிப்ரவரி 24 முதல் 26 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கடலூரில் 12 செமீ., திருத்தணி, சிவகிரியில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.