தென்மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்!

 

தென்மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்!

5 நாட்களுக்கு தென்தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்!

தமிழகத்தில் டிசம்பர் மாதம் முழுவதும் மழை பெய்தது. குறிப்பாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மழைப் பொழிவு அதிகமாக இருந்தது. அத்துடன் வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வரை தொடர்ந்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மழை பொழிவு படிப்படியாக குறைந்தது.

தென்மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்!

இந்நிலையில் கிழக்கு திசை காற்றாலைகளால் 5 நாட்களுக்கு தென்தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மன்னார்வளைகுடா, குமரி கடலுக்கு மீனவர்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்றும் வடதமிழகத்தில் 2 நாட்களுக்கு காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை மற்றும் புறநகரில் 2 நாட்களுக்கு காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.