டெல்லியில் போராடியது விவசாயிகள் அல்ல : அடித்துச் சொல்லும் ஹெச்.ராஜா

 

டெல்லியில் போராடியது விவசாயிகள் அல்ல : அடித்துச் சொல்லும் ஹெச்.ராஜா

டெல்லியில் போராட்டம் நடத்தியது விவசாயிகள் இல்லை என்றும் அவர்கள் எல்லாரும் நக்சல்ஸ் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பல நாட்களாக நடத்தப்பட்ட போராட்டம், டிராக்டர் பேரணி என்ற பெயரில் நேற்று திசை மாறிப்போனது. காவலர்களின் அனுமதியுடன் 12 மணிக்கு விவசாயிகள் பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், முன்கூட்டியே பேரணி நடத்தியதால் போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். பதிலுக்கு விவசாயிகளும் போலீசாரை தாக்கியதால் டெல்லியே நேற்று கலவர பூமியானது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகள் இல்லை என பாரதிய கிசான் சங்கம் அறிவித்து விட்டது. போராட்டத்தை திசை திருப்ப சிலர் போராட்டத்தில் நுழைந்ததிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

டெல்லியில் போராடியது விவசாயிகள் அல்ல : அடித்துச் சொல்லும் ஹெச்.ராஜா

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா டெல்லி போராட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், கையில் 6 அடி வாள் வைத்துக் கொண்டு காவல்துறையை கனிஸ்கான் நக்சல்ஸ் அட்டாக் செய்திருக்கிறார்கள். டிராக்டரை வைத்து போலீசாரை மோதி கொலை செய்வதற்காக திட்டமிட்டுள்ளனர். கடந்த 2017, ஜனவரியில் சென்னை மெரினா கடற்கரையில் கூடியதெல்லாம் தேச விரோதிகள், சமூக விரோதிகள் என்று சொன்னேன். அதை முதல்வரும் சொன்னார். ஹிப் ஹாப் ஆதியும் சொன்னார் தீய சக்திகள் புகுந்தது என்று. இல்லை, தீய சக்திகள் தான் அதை ஏற்பாடு செய்தது என்று கூறினார்.

டெல்லியில் போராடியது விவசாயிகள் அல்ல : அடித்துச் சொல்லும் ஹெச்.ராஜா

மேலும், இன்றைக்கு டெல்லியில் ஒரு விவசாயி கூட போராட்டத்தில் இல்லை. அதில் இருக்கும் அத்தனை பேரும் இடைத்தரகர்கள். எல்லாமே அர்பன் நக்சல்ஸ். எப்படியோ தேசத்தில் குழப்பதை ஏற்படுத்துவதற்காக இந்த போராட்டம் நடைபெற்றது. இது விவசாயிகள் போராட்டம் இல்லை. அதனால் தமிழக அரசு அனுமதிக்காதது சரி, முதல்வர் சரியாக செய்திருக்கிறார் என்றும் தெரிவித்தார்.