மறைந்த எழுத்தாளர் கி.ரா., நடிகர் விவேக்கிற்கு நாளை இரங்கல் தீர்மானம்!

 

மறைந்த எழுத்தாளர் கி.ரா., நடிகர் விவேக்கிற்கு நாளை  இரங்கல் தீர்மானம்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 24-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த எழுத்தாளர் கி.ரா., நடிகர் விவேக்கிற்கு நாளை  இரங்கல் தீர்மானம்!

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது .16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என்று உரையாற்றினார். .விவசாயிகள் நலனை பாதுகாக்க, வேளாண் உற்பத்தியை பெருக்க, ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட மிக நீண்ட செய்திக்குறிப்பை வாசித்து முடித்தார்.ஆளுநர் உரை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் உரை ஏமாற்றமளிக்கிறது என்றும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய திமுகவின் நிலைப்பாடு தற்போது மாறியுள்ளது. மாணவர்களுக்கான கல்விக் கடன் ரத்து குறித்து ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மறைந்த எழுத்தாளர் கி.ரா., நடிகர் விவேக்கிற்கு நாளை  இரங்கல் தீர்மானம்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி வரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. திமுக ஆட்சி அமைத்த பிறகு இன்று கூடிய முதல் சட்டப் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதில் ஆளுநர் உரைக்கு பின்பாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் பற்றி முடிவெடுக்கப்பட்டுள்ளது.ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை தொடங்குகிறது.ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு 24ஆம் தேதி முதல்வர் பதில் உரையாற்றுவார்.அத்துடன் நாளை மறைந்த எழுத்தாளர் கி.ரா., நடிகர் விவேக், துளசி அய்யா வாண்டையார், முன்னாள் எம்எல்ஏ காளியண்ணன் உள்ளிட்ட 4 பேருக்கும் சட்டமன்றத்தில் நாளை இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.