Home தமிழகம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை : நிம்மதியில் மக்கள்!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை : நிம்மதியில் மக்கள்!

நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் கூறியது.

கோடை காலத்தில் முக்கியமாக அக்னி வெயில் முடிந்து பல நாட்கள் ஆன நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களில் இன்னும் வெயில் சுட்டெரித்து வருகிறது குறிப்பாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இங்கு தென்மேற்கு பருவமழை தொடங்கி இருந்தாலும் அதற்கான சுவடே இல்லாமல் வெயில் கொளுத்துகிறது. தென்மேற்கு பருவமழை ஆரம்பமான நிலையிலும் தொடர்ச்சியான மழை பொழிவு இல்லாமல் இரவு நேரங்களில் மட்டும் சிறிது மழை பெய்து வந்தது.

இதுகுறித்து தெரிவித்த வானிலை ஆய்வு மையம், தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் விழுப்புரம், நாகை, கடலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் கூறியது.

இந்நிலையில் சென்னையில் அமைந்தகரை, அண்ணாநகர், சூளைமேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சற்று வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட...

இன்று 2,869 பேருக்கு மட்டுமே கொரோனா!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடியே 27 லட்சமாக அதிகரித்துள்ளது. 11 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை...

அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி! கவலைகிடம் என தகவல்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு. கடந்த 13-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூற சேலம் சென்றார். கார் திண்டிவனம் அருகே சென்றபோது அவருக்கு...

தலைமை தீயணைப்பு நிலையத்தில் ஆயுதபூஜை உற்சாக கொண்டாட்டம்

நாகை நாகப்பட்டினம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், ஆயுதபூஜை விழா உற்சாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நாகப்பட்டினம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!