விஜயபாஸ்கருக்கு கட்டம் கட்டிய வருமான வரித்துறை : 13 மணி நேரம் நடந்த ஐடி ரெய்டு!!

விஜயபாஸ்கருக்கு கட்டம் கட்டிய வருமான வரித்துறை :  13 மணி நேரம் நடந்த ஐடி ரெய்டு!!

அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரருடைய உதவியாளர் வீட்டில் 13 மணி நேரமாக வருமான துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

விஜயபாஸ்கருக்கு கட்டம் கட்டிய வருமான வரித்துறை :  13 மணி நேரம் நடந்த ஐடி ரெய்டு!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – திமுக கட்சிகள் தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி அதிகாரத்தில் உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட உழைத்து வருகிறது. அதேபோல் கடந்த 10 ஆண்டுகளாக முதல்வர் நாற்காலி கிடைக்காமல் அல்லல்படும் திமுக இந்த முறை எப்படியேனும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.இருவொருபுறமிருக்க தேர்தல் நெருங்கி வருவதால் பணம் பட்டுவாடா உள்ளிட்ட பல முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் கடந்த சில வாரங்களாக வருமானவரித் துறையினர் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர் .

விஜயபாஸ்கருக்கு கட்டம் கட்டிய வருமான வரித்துறை :  13 மணி நேரம் நடந்த ஐடி ரெய்டு!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணனின் மகன் பிரகாஷ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்ததால் ஐடி ரெய்டு நடந்தாக குற்றச்சாட்டும் எழுந்தன. அதேபோல் திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ. வேலு, கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் வீட்டிலும் ஐடி ரெய்டு நடைபெற்றது.

விஜயபாஸ்கருக்கு கட்டம் கட்டிய வருமான வரித்துறை :  13 மணி நேரம் நடந்த ஐடி ரெய்டு!!

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் உதயகுமாருக்கு வீரபாண்டி என்பவர் உதவியாளராக உள்ளார். தேர்தலையொட்டி அவர் வீட்டில் பணம் பட்டுவாடா செய்ய கட்டுக்கட்டாக நோட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் சென்றது. ரகசிய தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வீரபாண்டி வீட்டில் சோதனையிட்டனர். இதில் கணக்கில் வராத ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம். சுமார் 13 மணிநேரம் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.