#BREAKING : மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் ஐ.டி.ரெய்டு!!

 

#BREAKING : மு.க.ஸ்டாலின் மகள்  வீட்டில் ஐ.டி.ரெய்டு!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர்.

#BREAKING : மு.க.ஸ்டாலின் மகள்  வீட்டில் ஐ.டி.ரெய்டு!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் ஆட்சியைப் பிடிக்க திமுக முனைப்பு காட்டி வரும் நிலையில் ஹாட்ரிக் வெற்றி எடுக்க அதிமுக கடுமையாக உழைத்து வருகிறது .இது ஒருபுறமிருக்க தமிழக அரசியல் களத்தில் வருமான வரித்துறையினர் புகுந்து அரசியல் கட்சிகளை ஆட்டம் காண வைத்துள்ளனர். ஏற்கனவே முக்கிய புள்ளிகளின் வீட்டில் குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகள் வீட்டுக்குள் வருமான வரித்துறை நுழைந்துள்ளது.

#BREAKING : மு.க.ஸ்டாலின் மகள்  வீட்டில் ஐ.டி.ரெய்டு!!

இன்று காலை முதல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். சென்னை நீலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மகள் செந்தாமரை , மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நடந்தது. வேட்பாளர்களில் செல்வாக்கு படைத்த அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீடு மற்றும் அலுவலகம், முக ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு உட்பட 4 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.