ஒரேயொரு ரெய்டு… திமுக பிளான் டோட்டல் க்ளோஸ்; தெறித்து ஓடும் பைனான்ஸ் ஆசாமிகள்!

 

ஒரேயொரு ரெய்டு… திமுக பிளான் டோட்டல் க்ளோஸ்; தெறித்து ஓடும் பைனான்ஸ் ஆசாமிகள்!

திமுகவின் நிதி மூலதனமே எ.வ.வேலு தான். திமுக அறக்கட்டளையின் பல கோடி ரூபாய் பணம் வேலு மூலமாகத்தான் வெளியாட்களுக்கு வட்டிக்கு விடப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் பண மூட்டைகளைக் கொண்டுதான் திமுகவின் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. திமுகவின் அடிமடியிலே வருமான வரித்துறை கைவைத்துள்ளது. இது வேலுவை விட மற்ற திமுக வேட்பாளர்களுக்குத் தான் பெரிய தலைவலியைக் கொடுத்துள்ளது. நேர்காணலில் அத்தனை கோடி செலவழிப்பேன் இத்தனை கோடி செலவழிப்பேன் என்று உதார் விட்டவர்கள் இன்று விழிபிதுங்கி போய் நிற்கிறார்கள்.

ஒரேயொரு ரெய்டு… திமுக பிளான் டோட்டல் க்ளோஸ்; தெறித்து ஓடும் பைனான்ஸ் ஆசாமிகள்!

எல்லோரும் தேர்தல் செலவுகளுக்கான ‘சி’-க்கு தலைமையை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் களத்தில் எதிரொலித்தால் களமே அதிமுக வசம் சென்றுவிடும் என்ற அச்சம் தலைமைக்கு தொற்றிக்கொண்டது. உடனே பழைய நடைமுறையைக் கையாளலாம் என துரிதமாக முடிவெடுக்க அம்முடிவும் பாதகமாக முடிவடைந்துள்ளது. வழக்கமாக திமுக தேர்தல் காலத்தில் பைனான்ஸ் பார்ட்டிகளிடமே சி-க்களை பெறும். தேர்தல் முடிந்த பின் வட்டியோடு திருப்பியளித்துவிடும்.

ஒரேயொரு ரெய்டு… திமுக பிளான் டோட்டல் க்ளோஸ்; தெறித்து ஓடும் பைனான்ஸ் ஆசாமிகள்!

இந்த வழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறது திமுக. அப்படியாக பைனான்சியர்களிடம் திமுக புள்ளிகள் முட்டி மோத அவர்களோ கையை விரித்துவிட்டார்களாம். “பணம் ஒரு பிரச்சனையில்லை. ஆனால் அதை வெளியே எடுத்து அந்தந்த இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதுதான் பெரிய தலைவலி. அதனால் இந்த முறை விட்டுவிடுங்கள்” என கூறி சாரியுடன் போனை கட் செய்கிறார்களாம் பைனான்சியர்கள்.

ஒரேயொரு ரெய்டு… திமுக பிளான் டோட்டல் க்ளோஸ்; தெறித்து ஓடும் பைனான்ஸ் ஆசாமிகள்!

இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தால், “முந்தைய தேர்தல்களில் இந்த நடைமுறை தொடர்ந்தது உண்மை தான். அப்போதைய நிலைமை வேறு. இப்போதுள்ள நிலைமையோ வேறு. ஐடி அதிகாரிகள் கண்கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது சிக்குவார்கள். எப்போது சோழியை முடிக்கலாம் என்று. இந்தச் சமயத்தில் திமுகவுக்கு உதவி செய்ய போய் நாங்கள் சிக்கிக் கொண்டால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால் மறுத்துவிட்டோம்” என்கிறார்கள். இந்தத் தேர்தல் திமுக சொன்னது போல சவாலான தேர்தல் தான். எப்படி நீந்தி கடக்கிறார்கள் என்று பார்க்கலாம்.