வைரலாகிவரும் செந்தாமரை – சபரீசனுக்கு வழங்கப்பட்ட வருமான வரித்துறை ரசீது

 

வைரலாகிவரும் செந்தாமரை – சபரீசனுக்கு வழங்கப்பட்ட வருமான வரித்துறை ரசீது

சட்டமன்ற தேர்தலுக்கு 3 நாட்களே இருக்கும் நிலையில் அதிமுக – திமுக கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிவருகின்றன. தீவிர பிரச்சாரம் ஒருபுறம் அனல் பறந்துகொண்டிருக்கும் வேலையில், மறுபுறம் பணம் பட்டுவாடா உள்ளிட்ட பல முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் கடந்த சில வாரங்களாக வருமானவரித் துறையினர் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர். திமுக வேட்பாளர்கள் வேலு, அண்ணாமலை, செந்தில்பாலாஜி ஆகியோர் வீடுகளிலும், அதிமுக வேட்பாளர்களான விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் பூந்து விளையாடி வருகின்றனர்.

வைரலாகிவரும் செந்தாமரை – சபரீசனுக்கு வழங்கப்பட்ட வருமான வரித்துறை ரசீது

இந்த சூழலில் 12 மணி நேரமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – சபரீசன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் வலைவீசு சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். இன்று நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் போது குடும்பச் செலவுக்காக அவர்கள் வைத்திருந்த ரூ.1.36 லட்சம் மட்டுமே வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதனை கைப்பற்றிய அதிகாரிகள், அது கணக்கில் காட்டப்பட்ட பணம் என்பதால் அவர்களிடமே திருப்பி கொடுத்த அதிகாரப்பூர்வ ரசீது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது