சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைக்கும் வருமான வரித்துறை

 

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைக்கும் வருமான வரித்துறை

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்லூரியில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பாக அமைச்சர் சி.விஜயபாஸ்கரும், திமுக சார்பில் எம்.பழனியப்பனும் போட்டியிடுகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கரின் கோட்டை என சொல்லப்படும் விராலிமலையில், அவர் தனது மகளை வைத்து தீவிர பிரச்சாரத்தை நடத்திவருகிறார். தேர்தலுக்கு முன்பே தொகுதி மக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் போன்ற நிவாரணப் பொருட்கள், வேட்டி, சேலை, பித்தளைப் பானை உள்ளிட்டவற்றை பொங்கல் பரிசாக டோர் டெலிவரி செய்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைக்கும் வருமான வரித்துறை

இந்நிலையில் விராலிமலையில் கல்லூரி ஊழியர் வீரபாண்டி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வீரபாண்டியனுக்கு சொந்தமான 6 வீடுகளைக் கொண்ட குடியிருப்பிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அவரது அண்ணன் உதயகுமாருக்கும் தனி உதவியாளராகவும் உள்ளார். உதயகுமாருக்குச் சொந்தமான கல்லூரியையும் கவனித்து வருகிறார்.