வருமான வரித்துறையினரின் அடுத்த செக் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

 

வருமான வரித்துறையினரின் அடுத்த செக் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – திமுக கட்சிகள் தொடர்ந்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி அதிகாரத்தில் உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட உழைத்து வருகிறது. அதேபோல் கடந்த 10 ஆண்டுகளாக முதல்வர் நாற்காலி கிடைக்காமல் அல்லல்படும் திமுக இந்த முறை எப்படியேனும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க தேர்தல் நெருங்கி வருவதால் பணம் பட்டுவாடா உள்ளிட்ட பல முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் கடந்த சில வாரங்களாக வருமானவரித் துறையினர் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர் .

வருமான வரித்துறையினரின் அடுத்த செக் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் உதயகுமாரின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்திவருகின்றனர்.