“சென்னையில் கொரோனா அதிகரிப்பது உண்மை தான்” லாக்டவுன் போட்டா தான் கட்டுக்குள் வருமா?

“சென்னையில் கொரோனா அதிகரிப்பது உண்மை தான்” லாக்டவுன் போட்டா தான் கட்டுக்குள் வருமா?

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் 55 மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் மாணவிகளின் பெற்றோர் உறவினர்களுக்கு நடத்திய சோதனையில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அந்த வகையில் இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 8 பள்ளிகளை சேர்ந்த 68 மாணவர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“சென்னையில் கொரோனா அதிகரிப்பது உண்மை தான்” லாக்டவுன் போட்டா தான் கட்டுக்குள் வருமா?

இந்நிலையில் தஞ்சையில் மேலும் 41 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை சாஸ்தா பல்கலை.,யில் 6 மாணவர்கள், தஞ்சை பள்ளிகளில் மேலும் 35 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

“சென்னையில் கொரோனா அதிகரிப்பது உண்மை தான்” லாக்டவுன் போட்டா தான் கட்டுக்குள் வருமா?

இந்நிலையில் தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து தமிழக அரசு முடிவு செய்யும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , சென்னையில் கொரோனா அதிகரிப்பது உண்மை தான்; அதனால் பெரிய அளவில் தடுப்பூசி முகாம் நடத்தி ஒரேநாளில் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

“சென்னையில் கொரோனா அதிகரிப்பது உண்மை தான்” லாக்டவுன் போட்டா தான் கட்டுக்குள் வருமா?

அத்துடன் ஊரடங்கு விதித்து தான் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இல்லை. இதனால் மீண்டும் ஊரடங்கு என்று வதந்தி பரப்பினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்