கேள்விகளை எதிர்க்கொள்ள விரும்பாத மோடி அரசு.. நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து.. பா.ஜ.க.வை தாக்கிய சிவ சேனா

 

கேள்விகளை எதிர்க்கொள்ள விரும்பாத மோடி அரசு.. நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து.. பா.ஜ.க.வை தாக்கிய சிவ சேனா

சீன ஊடுருவல், விவசாயிகள் போராட்டம் போன்ற விவகாரங்கள் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளை எதிர்கொள்ள விரும்பவில்லை, அதனால்தான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்ததாக சிவ சேனா குற்றம் சாட்டியுள்ளது.

பொதுவாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் இறுதியில் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாகவும், நேரடியாக அடுத்த ஆண்டு ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டலாம் என அனைத்து கட்சிகளும் விரும்புவதாக நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்ததற்கு கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டியதை சிவ சேனா விமர்சனம் செய்துள்ளது.

கேள்விகளை எதிர்க்கொள்ள விரும்பாத மோடி அரசு.. நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து.. பா.ஜ.க.வை தாக்கிய சிவ சேனா
நாடாளுமன்றம்

சிவ சேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது: பிரதமர் மோடியும், அவரது அரசாங்கமும் கொரோனா வைரஸை எதிர்த்து போராட மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. ஆனால் அவர்களே ஒடுகிறார்கள். முன்எப்போதும் இல்லாத கோவிட் நிலைமை காரணமாக நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது என்பது உண்மை இல்லை. ஏனெனில் அதே சூழ்நிலையில் பீகார் தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு பல கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கியுள்ள பணிகளை பார்த்தால், கொரோனா வைரஸ் மேற்கு வங்கத்தை விட்டு போய் விட்டது போல் தெரிந்தது.

கேள்விகளை எதிர்க்கொள்ள விரும்பாத மோடி அரசு.. நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து.. பா.ஜ.க.வை தாக்கிய சிவ சேனா
பா.ஜ.க.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரை 2 தினங்கள் நடத்தியதற்கு எதிர்கட்சி (பா.ஜ.க.) கடுமையாக குற்றம் சாட்டியது. ஆனால் ஜனநாயகம் குறித்த பா.ஜ.க.வின் கொள்கைகள் அதன் வசதி மற்றும் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுகின்றன. தொற்றுநோய் பொங்கி எழுந்தாலும் உலகம் நிற்கவில்லை. இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டத்தின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டார். கோவிட்-19 பரவலின்போது அமெரிக்கா அதிபர் தேர்தல்களை நடத்தியது. ஆனால் நாம் நான்கு நாள் குளிர்கால அமர்வு நடைபெற நாம் அனுமதிக்கவில்லை. ஜனநாயகத்தின் மிகப்பெரிய கோயிலுக்கு (நாடாளுமன்றம்) நாம் பூட்டு போட்டுள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.