தமிழக அரசு இந்துக்களிடம் பாரபட்சம் காட்டுவது சரியல்ல… மன்னார்குடி ஜீயர் பேட்டி

 

தமிழக அரசு இந்துக்களிடம் பாரபட்சம் காட்டுவது சரியல்ல… மன்னார்குடி ஜீயர் பேட்டி

கொரோனாவைக் காரணம் காட்டி இந்துக்களுக்கு தமிழக அரசு பாரபட்சம் காட்டுவது சரியில்லை என்று மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் ராமனுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக சமய விழாக்களுக்கு மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் வழக்கமான வழிபாடுகள் நடந்தாலும் பக்தர்கள் அனுமதிக்கத் தடை உள்ளது. இந்த வகையில் மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் தொடங்கி பல்வேறு விழாக்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றைப் பக்தர்கள் ஆன்லைனில் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

தமிழக அரசு இந்துக்களிடம் பாரபட்சம் காட்டுவது சரியல்ல… மன்னார்குடி ஜீயர் பேட்டி
மற்ற மத வழிபாடுகளுக்கும் இதே கட்டுப்பாடு உள்ளது. பக்தர்கள் அனுமதியின்றி விழாக்கள் நடத்தப்படுகின்றன. ரம்ஜான், பக்ரீத் பண்டிகையின் போது சிறப்பு தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டது. அவரவர் வீடுகளிலேயே வழிபாடு நடத்த கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

தமிழக அரசு இந்துக்களிடம் பாரபட்சம் காட்டுவது சரியல்ல… மன்னார்குடி ஜீயர் பேட்டி
ஆனால், விநாயகர் சதுர்த்தி விழாவை பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் தீவிரமாக பற்றிக்கொண்டு அனுமதி அளிக்க வேண்டும் என்று போராடி வருகின்றன.
திருச்சி ஶ்ரீரங்கத்தில் மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது. “நெல்லையில் கிறிஸ்தவ கோவில், நாகூர் தர்கா ஆகியவற்றில் உற்சவங்கள் நடத்த அரசு அனுமதிக்கிறது. ஆனால், இந்துக்கள் விநாயகர் சதுர்த்தி நடத்த மட்டும் பாரபட்சம் காட்டுகிறது. கொரோனா பரவல் ஏற்பட்டுவிடும் என்று கூறுகிறார்கள். இந்த கொரோனா அச்சம் இருந்தாலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் தடை வருகிறது.
அரசு என்பது சாதி, மதத்தைக் கடந்து செயல்பட வேண்டும். இந்துக்களுக்கு மட்டும் பாராட்சத்துடன் நடந்துகொள்வது சரியில்லை. தமிழக அரசு இந்த விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்து விரோத அரசாக இருக்கக் கூடாது. மற்ற மாநிலங்களில் பெரிய பெரிய கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் கொரோனாவைக் காரணம் காட்டி திறக்காமல் உள்ளனர். சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கோவில்களைத் திறக்க வேண்டும்.

தமிழக அரசு இந்துக்களிடம் பாரபட்சம் காட்டுவது சரியல்ல… மன்னார்குடி ஜீயர் பேட்டி
சமூக ஊடகங்களில் வைணவர்களுக்கு ஆதரவாகப் பேசுவது போலப் பிரிவினைக் கருத்துக்களை சிலர் பரப்புகின்றனர். இது போன்ற இந்து விரோத கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது” என்றார்.