’’ பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை’’-அமைச்சர் செங்கோட்டையன்

’’ பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை’’-அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனாவினால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், தளர்வுகளில் பள்ளிகள் எப்போது மீண்டும் துவங்கப்படும் என்ற கேள்விக்கு, பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று பதிலளித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.

’’ பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை’’-அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற
விழாவில் கிராமங்களுக்கு

கோபிசெட்டிபாளையத்தில் அம்மா நடமாடும் நியாவிலை கடை வாகனங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து
தொடங்கிவைத்தார்.

’’ பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை’’-அமைச்சர் செங்கோட்டையன்

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ’’தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை’’என்றார். மேலும், ‘’தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் முழுமையாக பெற்றுள்ளது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 15.3 லட்சம் மாணர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. செப்டம்பர் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் . 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில்
சேர்ந்துள்ளனர். பள்ளிகளில் காலியாக உள்ள டெக்னிக்கல் பிரிவிற்கு விரைவில் பணியிடம் நிரப்பப்படும். 15 இடங்களில் துவக்கபள்ளிகளும் 10 இடங்களில்
உயர்நிலை பள்ளிகளும் துவங்கப்படும்’’ என தெரிவித்தார்.

’’ பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை’’-அமைச்சர் செங்கோட்டையன்