தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியமே இல்லை – செங்கோட்டையன்

தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியமே இல்லை – செங்கோட்டையன்

திருச்சியில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள 525 தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கினார்.

தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியமே இல்லை – செங்கோட்டையன்
தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியமே இல்லை – செங்கோட்டையன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,தகுதியான அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு எந்தவித தடையும் இருக்காது என்றும், அதற்கான முழு முயற்சியை,எடுத்து வருவதாகவும், விரைவில் மாணவர்கள் சேரும் காட்சியைக் காணலாம் என்றும் கூறினார்.

தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியமே இல்லை – செங்கோட்டையன்
தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியமே இல்லை – செங்கோட்டையன்

மேலும், காலாண்டு, அரையாண்டு குறித்த எந்தவிதமான முடிவுகளும் எட்டப்படவில்லை என்று கூறிய அவர், இந்த ஆண்டு, அரசுப்பணிகளில் உள்ளவர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருவதாகவும், நடப்பாண்டு 4.5 சதவீதம் தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பள்ளிகள் எப்போது திறக்க வேண்டும் என்பதை முதல்வர் தான் அறிவிப்பார் என்றும், இப்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியமே இல்லை – செங்கோட்டையன்