’இனியும் பள்ளிகள் திறக்காமல் இருப்பது நல்லதல்ல’ இங்கிலாந்து பிரதமர்

’இனியும் பள்ளிகள் திறக்காமல் இருப்பது நல்லதல்ல’ இங்கிலாந்து பிரதமர்

கொரோனாவின் பாதிப்பு உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. உலக வல்லரசு நாடுகளே கொரோனாவைக் கட்டுப்படுத்த படாதபாடு பட்டுவருகின்றன.

இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா பாதிப்பு மிக அதிகளவில் இருந்தது. இதனால், மார்ச் மாதம் முதல் பள்ளிகளை மூடச் சொல்லி உத்தரவு இட்டிருந்தது அந்நாட்டு அரசு.

’இனியும் பள்ளிகள் திறக்காமல் இருப்பது நல்லதல்ல’ இங்கிலாந்து பிரதமர்

மே மாதத்தில் கொரோனா பாதிப்பின் உச்சியில் இருந்த இங்கிலாந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பிலிருந்து விடுபட்டு வருகிறது.

’இனியும் பள்ளிகள் திறக்காமல் இருப்பது நல்லதல்ல’ இங்கிலாந்து பிரதமர்

இங்கிலாந்தில் புதிய நோயாளிகளி எண்ணிக்கையும் நாள்தோறும் குறைந்து வருகிறது. அதைப்போலவே, இறப்போர் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.

’இனியும் பள்ளிகள் திறக்காமல் இருப்பது நல்லதல்ல’ இங்கிலாந்து பிரதமர்

இந்த மாற்றத்திற்கு கடுமையான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு கையாண்டது.

இந்நிலையில் பள்ளிகளை அடுத்த மாதம் திறக்கும் முடிவுக்கு அந்நாட்டின் பிரதமர் போரீஸ் ஜான்சன் வந்திருக்கிறார்.

இதுகுறித்து அவர், ’இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இனியும் பள்ளிகளைத் திறக்காமல் இருபது நல்லதல்ல. பள்ளிகளில் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையான முகக்கவமும் மாணவர்களுக்கு இடையே போதுமான இடைவெளி உள்ளிட்ட விஷயங்கள் நிச்சயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

’இனியும் பள்ளிகள் திறக்காமல் இருப்பது நல்லதல்ல’ இங்கிலாந்து பிரதமர்

மாணவர்களுக்குக் கல்வி மிகவும் முக்கியம். அதை அவர்கள் தவறவில்லை நாடே பெரிய பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்து பிரதமரின் அறிவிப்பு படி, அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் அங்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. புதிய நடைமுறையில் தொடங்கப்படும் பள்ளியின் இயல்புகள் எப்படி இருக்கும்…. அவற்றோரு மாணவர்கள் எளிதில் தங்களைப் பொருத்திக்கொள்வார்களா… போன்றவற்றை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.