பாஜக வேல் யாத்திரையால் கொரோனா அதிகம் பரவும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓட்டேரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவின் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கொரோனா அதிகமாக பரவும். 2வதுபி அலை, 3 வது அலை, ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலனை காக்கவேண்டியது அரசின் கடமை. பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழக்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே வேல் யாத்திரையை பாஜக கைவிடுவது நல்லது; சட்டத்தை மீறினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்”என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாளை முதல் பாஜக சார்பில் ஒருமாத காலத்திற்கு வெற்றிவேல் யாத்திரை நடத்தப்பட இருந்தது. ஆனால் இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் விளக்கமளித்த தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியதால் பொதுநல வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டன.