’ரஜினி அரசியலுக்கு வராதது நல்லதுதான்’ இலங்கை முன்னாள் அமைச்சர் சொல்லும் வித்தியாசமான காரணம்!

 

’ரஜினி அரசியலுக்கு வராதது நல்லதுதான்’ இலங்கை முன்னாள் அமைச்சர் சொல்லும் வித்தியாசமான காரணம்!

ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வரபோகிறார் என்ற கேள்வியை மீடியாவும் அவரின் ரசிகர்களும் கடந்த 25 ஆண்டுகளாகக் கேட்டு வந்தனர். அவரும் தனது படங்களிலும், மேடை பேச்சுகளிலும், பேட்டிகளிலும் மறைமுகமாகவே பதில் சொல்லி வந்தார்.

ஒரு கட்டத்தில் அது இன்னும் தீவிரமானது. 2017 ஆம் ஆண்டு டிசம்பரில். பேசிய ரஜினி விரைவில் கட்சித் தொடங்குவேன் என்றார். அது தள்ளிக்கொண்டே சென்றது. கொரோனா ஊரடங்கில் அது இன்னும் முடங்கியது. ஒருவழியாக இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அறிக்கை, ஜனவரியில் கட்சி என முடிவெடுத்த ரஜினி, ஹைதராபாத் சூட்டிங்கில் நேரடியாகக் கண்ட காட்சிகள் அரசியலுக்கு முழுக்கு போட வைத்துவிட்டன.

’ரஜினி அரசியலுக்கு வராதது நல்லதுதான்’ இலங்கை முன்னாள் அமைச்சர் சொல்லும் வித்தியாசமான காரணம்!

கட்சி தொடங்க போவதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்து அறிக்கையே வெளியிட்டு விட்டார். இதற்கு அவரின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தார்கள். ரஜினி எதிர்ப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இலங்கையில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், நடிகர் ரஜினியின் அரசியல் வருகை முடிவுக்கு வந்தது பற்றி கருத்துகளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் பல விஷயங்களை மனோ கணேசன் பகிருந்திருக்கிறார். அவற்றிலிருந்து சில…

பல வட இந்திய மாநிலங்களை விட முன்னேறிய ஒரு மாநிலம் தமிழ்நாடு,.

வட இந்தியாவில், டெல்லி, மும்பாய், கொல்கத்தா, சண்டிகர், அஹமதாபாத் ஆகிய மாநகரங்களை சுற்றிய பகுதிகளில் மட்டுமே “முன்னேற்றம்” தெரியும்.

வட இந்தியாவில், உள்ளூரில், கிராமிய நாட்டு புறங்களில், “பின்னேற்றம்” கண்கூடாக தெரியும்.

’ரஜினி அரசியலுக்கு வராதது நல்லதுதான்’ இலங்கை முன்னாள் அமைச்சர் சொல்லும் வித்தியாசமான காரணம்!

தமிழ்நாட்டின் இந்த “ஒப்பீட்டளவிலான முன்னேறிய” நிலைமைக்கு காரணம் இம்மாநிலத்தையும், புதுச்சேரியையும் தேசிய கட்சிகள் அல்லாமல், “திராவிட” கட்சிகள் பல பத்தாண்டுகளாக ஆண்டு வருவதே காரணம்.

திராவிட இயக்க அணியின் மூலக்கொள்கை “சமூக நீதி” என்பதாகும். இந்நீதி, நீதிக்கட்சியிலிருந்து ஆரம்பமாகி பெரியார், அண்ணா ஆகிய பெருந்தலைவர்களால் செதுக்கப்பட்டதாகும். இதுதான் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிநாதமாக விளங்குகிறது” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் ரஜினியைப் பற்றிச் சொல்லுகையில், “இந்த பின்னணியில் பார்த்தால், தேசிய கட்சிகளை “ஆன்மீகம்” என்ற பெயர் சூட்டி, குறுக்கு வழியில் சிம்மாசனத்தில் உட்கார வைக்க முயன்ற, நடிகர் ரஜினி காந்த் நேரடி அரசியலை கைவிட்டமை, தமிழகத்தில் இன்று நிகழ்ந்த மிக நல்ல ஒரு சம்பவம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

’ரஜினி அரசியலுக்கு வராதது நல்லதுதான்’ இலங்கை முன்னாள் அமைச்சர் சொல்லும் வித்தியாசமான காரணம்!

இந்தியாவில் ரஜினிக்கு ஆதரவு வெறுப்பு எனும் நிலையில் இலங்கையிலிருந்து வெளிப்பட்டிருக்கும் இந்தப் பார்வை கவனிக்கத்தக்கது. இதன் பின்னூட்டங்களில் மனோ கணேசனின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்புமாக பதிவுகள் பதியப்பட்டிருக்கின்றன.