2020 இறுதிக்குள் நாட்டில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று பரவும்

 

2020 இறுதிக்குள் நாட்டில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று பரவும்

டெல்லி: இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள் 50 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஒரு லட்சத்து 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 71,410 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி உள்ளனர். கொரோனா தொற்றால் நாட்டில் 4797 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில், இந்த வருடம் முடிவதற்குள் நாட்டின் மக்கள் தொகையில் பாதிப் பேருக்கு (அதாவது 67 கோடி பேர்) கொரோனா தொற்று பரவும் என்று தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

2020 இறுதிக்குள் நாட்டில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று பரவும்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதில் 90 சதவீதம் பேருக்கு தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதே தெரியாமல் இருப்பார்கள் என்று கூறியுள்ளனர். இவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே கொரோனாவால் ஆபத்தான நிலைக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது சுமார் 3 கோடி பேர் கொரோனாவால் ஆபத்தான நிலையை அடைவார்கள் என்று கூறப்படுகிறது.