இ-பாஸ் பெற்றுத்தருவதாக கூறும் எந்த நபரையும் பொதுமக்கள் நம்பவேண்டாம் : வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

இ-பாஸ் பெற்றுத்தருவதாக கூறும் எந்த நபரையும் பொதுமக்கள் நம்பவேண்டாம் : வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.

இ-பாஸ் பெற்றுத்தருவதாக கூறும் எந்த நபரையும் பொதுமக்கள் நம்பவேண்டாம் : வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

அதன்படி வேலூரில் மேலும் 139 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 6,319 ஆக அதிகரித்துள்ளது. இதில் 63 பேர் பலியான நிலையில் 4,863 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

இ-பாஸ் பெற்றுத்தருவதாக கூறும் எந்த நபரையும் பொதுமக்கள் நம்பவேண்டாம் : வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

இந்நிலையில் வேலூரில் ரூ.3,000 லஞ்சம் பெற்றுக்கொண்டு இடைத்தரகர்கள் இ-பாஸ் வாங்கித் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள வேலூர் ஆட்சியர், “இ-பாஸ் பெற்றுத்தருவதாக கூறும் எந்த நபரையும் பொதுமக்கள் நம்பவேண்டாம்” என்று கூறியுள்ளார்.