ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் ஆத்திரம்… ஊராட்சி மன்ற தலைவரை, கிராமத்தை விட்டு ஒதுக்கிவைத்த அவலம்!

 

ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் ஆத்திரம்… ஊராட்சி மன்ற தலைவரை, கிராமத்தை விட்டு ஒதுக்கிவைத்த அவலம்!

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊராட்சி மன்ற தலைவர் குடும்பத்துடன் ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த கட்சாத்த நல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பெருமாள். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, அங்கு விளையாட்டு மைதானம் அமைத்து உள்ளார். இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஒன்றிணைந்து ஊராட்சி தலைவர் பெருமாள் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 15 குடும்பத்தினரை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்து உள்ளனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் ஆத்திரம்… ஊராட்சி மன்ற தலைவரை, கிராமத்தை விட்டு ஒதுக்கிவைத்த அவலம்!

இதுகுறித்து, பெருமாள் வட்டாட்சியரிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது கிராமத்தில் முளைப்பாரி உற்சவம் நடைபெறும் நிலையில், ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினரிடம் இருந்து திருவிழாவிற்கான வரி வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊராட்சி தலைவர் பெருமாள் உள்பட 15 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று சிவகங்கை ஆட்சியர் மதுசூதன் ரெட்டியை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

மனுவை பெற்றுகொண்ட ஆட்சியர், கோட்டாட்சியர் தலைமையில் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்காக ஊராட்சி மன்ற தலைவரையே கிராமத்தை ஒதுக்கிவைத்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.