“பெட்ரோலில் 10% எத்தனால்” வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

 

“பெட்ரோலில் 10% எத்தனால்” வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகிப்பதில் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பெட்ரோலில் 10% எத்தனால்” வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறுமுகத்திலேயே உள்ளது. அந்த வகையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் 91 ரூபாய் 19 காசுகளாகவும், டீசல் விலை விட்டர் 84 ரூபாய் 44 காசுகளாகவும் உள்ளது. இப்படியே போனால் லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“பெட்ரோலில் 10% எத்தனால்” வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

இந்நிலையில் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில், பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகிப்பதில் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் . மத்திய அரசின் ஆணைப்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 % எத்தனால் கலக்கிறது. பெட்ரோலியத்தில் எத்தனால் கலப்பதால் வாகனங்களில் தண்ணீர் இறங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எத்தனால் உள்ள பெட்ரோலில் தண்ணீர் இறங்குவதால் வாகனத்தை இயக்க கடினமாக இருக்கும் அல்லது ஜெர்க் ஆகும். இதனால் வாகன டேங்கில் தண்ணீரால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளரே பொறுப்பு ” என்றும் தெரிவித்துள்ளார்.