9 தொகுதிகளை கேட்கும் விசிக ; நோ சொன்ன ஸ்டாலின்!

 

9 தொகுதிகளை கேட்கும் விசிக ; நோ சொன்ன ஸ்டாலின்!

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட 9 தொகுதிகளை விசிக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

9 தொகுதிகளை கேட்கும் விசிக ; நோ சொன்ன ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது . தமிழகத்தின் பிரதான கட்சிகள் திமுக , அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. திமுக கூட்டணியில் உள்ள முஸ்லீம் லீக் மூன்று தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காங்கிரஸ், மதிமுக ,விசிக உடன் இன்னும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை

9 தொகுதிகளை கேட்கும் விசிக ; நோ சொன்ன ஸ்டாலின்!

இந்நிலையில் திமுக கூட்டணியில் 15 தொகுதிகளின் விருப்பப்பட்டியலை விசிக கொடுத்துள்ளதாகவும் , அதில் 9 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில் திமுக 5 தொகுதிகள் தர முன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் பெற்ற விசிக தற்போது 9 தொகுதிகளில் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரட்டை இலக்க எண்ணில் தொகுதிகளை ஒதுக்க திமுக மறுப்பதால் 9 தொகுதிகளை விசிக கேட்பதாகவும் தெரிகிறது.