எம்ஜிஆர் பிறந்தநாளில் கட்சி ஆரம்பிக்கும் ரஜினி?! அதிருப்தியில் அதிமுகவினர்…!

 

எம்ஜிஆர் பிறந்தநாளில் கட்சி ஆரம்பிக்கும் ரஜினி?! அதிருப்தியில் அதிமுகவினர்…!

எம்ஜிஆர் பிறந்த நாளில் நடிகர் ரஜினி கட்சி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்ஜிஆர் பிறந்தநாளில் கட்சி ஆரம்பிக்கும் ரஜினி?! அதிருப்தியில் அதிமுகவினர்…!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை பலரும் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த ஒன்று தான். கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்த ரஜினி அதற்கான பணிகளை செய்யாமலே முடக்கி வைத்திருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.

எம்ஜிஆர் பிறந்தநாளில் கட்சி ஆரம்பிக்கும் ரஜினி?! அதிருப்தியில் அதிமுகவினர்…!

அத்துடன், சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என ரஜினி அறிவித்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியதால் ரஜினி ரசிகர்கள் அவரின் அறிவிப்புக்காக காத்திருந்தனர். அப்போது தான் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும், அதன் அறிவிப்பை டிசம்பர் இறுதியில் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

எம்ஜிஆர் பிறந்தநாளில் கட்சி ஆரம்பிக்கும் ரஜினி?! அதிருப்தியில் அதிமுகவினர்…!

இந்நிலையில் எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17ல் தனது கட்சியை தொடங்க நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்ஜிஆரின் ஆட்சியை கொடுப்பேன் என்றார் ரஜினிகாந்த் அறிவித்த நிலையில் எம்ஜிஆர் பிறந்த நாளில் கட்சி தொடங்க ஆயத்தமாகியுள்ளார். கட்சி தொடங்கும் தேதி டிசம்பர் 31ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்கவுள்ள நிலையில் இந்த செய்தியானது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கமல் ஹாசன் எம்ஜிஆர் எங்கள் சொத்து, அவர் மடியில் வளர்ந்தவன் நான் என்று அரசியலுக்கு முட்டிக்கொடுக்க எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடி வந்த நிலையில் தற்போது ரஜினியும் எம்ஜிஆரை முன்னெடுத்து செல்வது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.