போதையில் அத்துமீறிய இளைஞர்; கொலை செய்த பெண் : போலீசார் எடுத்த அதிரடி முடிவு!

போதையில் அத்துமீறிய இளைஞர்; கொலை செய்த பெண் : போலீசார் எடுத்த அதிரடி முடிவு!

இளைஞரை பெண் ஒருவர் கொலை செய்த வழக்கில் தற்காப்புக்காக நடந்த கொலை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

போதையில் அத்துமீறிய இளைஞர்; கொலை செய்த பெண் : போலீசார் எடுத்த அதிரடி முடிவு!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அல்லிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கௌதமி. இவருக்கு தாய் – தந்தை இல்லாததால் உறவினர் வீட்டில் தங்கி வந்துள்ளார். கடந்த 3ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற கௌதமியை அவரது உறவினர் அஜித் குமார் பின் தொடர்ந்து சென்று கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த போராட்டத்தில் கௌதமி அஜித் குமாரின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போதையில் அத்துமீறிய இளைஞர்; கொலை செய்த பெண் : போலீசார் எடுத்த அதிரடி முடிவு!

இதையடுத்து சோழவரம் காவல் நிலையத்தில் சரணடைந்த கௌதமி தன்னை பாலியல் கொடுமை செய்ய வந்த நபரிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்ளவே கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து அஜித் குமாரின் சடலத்தை கைப்பற்றிய சோழவரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போதையில் அத்துமீறிய இளைஞர்; கொலை செய்த பெண் : போலீசார் எடுத்த அதிரடி முடிவு!

இந்த வழக்கு விசாரணை முடிவில் தற்காப்புக்காக நடந்த கொலை என கண்டறிந்துள்ள நிலையில் எஸ்.பி. அரவிந்தன், கொலை வழக்கு 302 என பதிவு செய்யாமல், இது தற்காப்புக்காக நடந்த கொலை என இந்திய தண்டனை சட்டம் 100வது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.