மாட்டுக்கொட்டகையில் இயங்கும் ஐடி நிறுவனம்!

மாட்டுக்கொட்டகையில் இயங்கும் ஐடி நிறுவனம்!

கொரோனா ஊரடங்கின் காரணமாக மகாரஷ்டிராவின் புனே நகரில் இருந்த தனது ஐடி நிறுவனத்தையும் மூட நேர்ந்ததால் தாதாசாகேப் பகத் வருத்தப்பட்டார். பின்னர் மாற்று யோசனை செய்து தனது கிராமத்தில் உள்ள மாட்டுக்கொட்டகையில் ஐடி நிறுவனத்தை இயக்கி வருகிறார்.

மாட்டுக்கொட்டகையில் இயங்கும் ஐடி நிறுவனம்!

டூ கிராபிக்ஸ் என்ற மென்பொருளை இவர் கடந்த மூன்று வருடங்களாக மேம்படுத்தி வருகின்றார்.

மாட்டுக்கொட்டகையில் இயங்கும் ஐடி நிறுவனம்!

விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், ஆறு மாதம் படிப்பு ஆறு மாதம் கரும்பு தோட்ட வேலை என்று காலம் கழித்திருக்கிறார். வாழ்வின் திருப்புமுனையாக புணேவில் உள்ள இன்போசில் அலுவலகத்தில் ஆபீஸ் பாய் வேலைக்கு சேர்ந்தார். அங்கு மென்பொருள் பற்றி அறிந்து, தெளிந்து கொண்டதன பயணாக இன்று தானே ஒரு ஐடி நிறுவனத்தை நடத்தி ஒரு மென்பொருளையும் உருவாக்கியும் சாதனை படைத்திருக்கிறார். இது போன்ற சின்ன செயல்களால் இந்தியாவின் மின்னணு பொருளாதரத்தை வளர்ப்பதோடு, வேலைவாய்ப்பினையும் பெருக்கலாம் என்று நம்பும், தாதாசாகேப் பகத், கொரோனா ஒழிந்து இயல்பு நிலைக்கு உலகம் மாறும் நேரத்திற்காக காத்திருக்கிறார்.

மாட்டுக்கொட்டகையில் இயங்கும் ஐடி நிறுவனம்!