• February
    29
    Saturday

Main Area

Main



வைகோவின் எம்பி பதவிக்கு ஆபத்து: கொடுத்த பதவியை பறிக்குமா திமுக?!

வைகோ
வைகோ

சென்னை: வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளதால்  அவரின் எம்.பி பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மதிமுகவை உடைக்க கருணாநிதி முயற்சி செய்வதாகக் கடந்த 2006ஆம் ஆண்டு,  அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதினர். இதையடுத்து வைகோ மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்கள் ஏற்கனவே சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணையும் முடிவடைந்து விட்டது.

dmk

இந்நிலையில் திமுக தொடர்ந்த இந்த அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் வைகோவிற்கு எதிராக இரண்டு ஆண்டுகளோ  அல்லது அதற்கு மேலாகவோ தீர்ப்பு வழங்கப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் மாநிலங்களவை எம்பியாக தொடரமுடியாத சூழல் ஏற்படும். இதனால் இந்த வழக்கில் அளிக்கப்படவுள்ள தீர்ப்பை  வைகோ மட்டுமில்லாது திமுகவினரும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். 

vaiko

முன்னதாக கடந்த மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த வைகோவை திமுக மாநிலங்களவை எம்பியாக அனுப்பி வைத்துள்ளது. ஏற்கனவே வைகோ மீதான தேச துரோக வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை  வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.