கொரோனா எதிரொலி: இஸ்ரோவின் மகேந்திரகிரி மையம் 5 நாட்களுக்கு மூடல்!

 

கொரோனா எதிரொலி: இஸ்ரோவின் மகேந்திரகிரி மையம் 5 நாட்களுக்கு மூடல்!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 21 லட்சத்து 98 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 52ஆயிரத்து 791பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் 4,231 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா எதிரொலி: இஸ்ரோவின் மகேந்திரகிரி மையம் 5 நாட்களுக்கு மூடல்!

இந்நிலையில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கடந்த ஒரு வாரத்தில் ஐந்து பேருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து நாளை முதல் வருகிற 14-ஆம் தேதி வரை 5 நாட்கள் மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உள்ளே அமைந்துள்ள தீயணபை்புத்துறை அதிகாரி இருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த 13 பேர் வரும் 23 ஆம் தேதி வரை தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

இதனைதொடர்ந்து நாளையிலிருந்து வரும் 14ஆம் தேதி வரை விண்வெளி ஆராய்ச்சி மையம் மூடப்படுவதாக ஐபிஆர்சி பொது நிர்வாக அதிகாரி சுமா தெரிவித்துள்ளார்.