கொரோனாவுக்கு எதிராக களமிறங்கிய ‘கருடா’ ட்ரோன்கள்… டிரெய்லர் விட்ட இஸ்ரோ!

 

கொரோனாவுக்கு எதிராக களமிறங்கிய ‘கருடா’ ட்ரோன்கள்… டிரெய்லர் விட்ட இஸ்ரோ!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் பரவல் கோர தாண்டவம் ஆடிவருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டிச் செல்கிறது. நாளொன்றுக்கு உயிரிழப்பு நான்காயிரத்தை நெருங்கி வருகிறது. மூன்றாம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே இரண்டாம் அலையின் தீவிரத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுள்ள நிலையில், மூன்றாம் அலையைத் தாங்குவார்களா என்ற பீதி எழுந்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக களமிறங்கிய ‘கருடா’ ட்ரோன்கள்… டிரெய்லர் விட்ட இஸ்ரோ!

ஆந்திர மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிதீவிரமாக உள்ளது. இதனால் அங்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இச்சூழலில் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள இஸ்ரோவுக்கு அருகே ஊழியர்களுக்கான குடியிருப்பு பகுதி இருக்கிறது. இப்பகுதியில் வசிக்கும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 300 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி 30 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.

கொரோனாவுக்கு எதிராக களமிறங்கிய ‘கருடா’ ட்ரோன்கள்… டிரெய்லர் விட்ட இஸ்ரோ!

பெரும்பாலோனோர் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒருவருக்கொருவர் உதவும் சூழல் இல்லாமல் போயுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களையும் மருத்துவப் பொருள்களையும் வழங்க புதிய முயற்சி ஒன்றை கையாண்டுள்ளனர். அதற்காக ஆளில்லாம சிறிய ரக விமானமான ட்ரோன்களின் உதவியை நாடியிருக்கிறார்கள். இதற்காக சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ட்ரோன்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

கொரோனாவுக்கு எதிராக களமிறங்கிய ‘கருடா’ ட்ரோன்கள்… டிரெய்லர் விட்ட இஸ்ரோ!

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறுகையில், “குடியிருப்பில் வசிக்கும் இஸ்ரோ ஊழியர்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் காய்கறிகளை வழங்கவும், அந்தப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கவும், இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக சோதனை ஓட்டம் நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது. திருப்தியளிக்கும் விதமாக ட்ரோன்கள் செயல்படுகின்றன” என்றார். இந்த முயற்சி விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.

கொரோனாவுக்கு எதிராக களமிறங்கிய ‘கருடா’ ட்ரோன்கள்… டிரெய்லர் விட்ட இஸ்ரோ!

தற்போது இதே நிறுவனத்துடன் கர்நாடக மாநில அரசும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவப் பொருள்களைக் கொண்டுசெல்லவும், கிருமிநாசினி தெளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ட்ரோன் செயல்பாட்டை கர்நாடகா நடைமுறைக்குக் கொண்டுவரவிருக்கிறது. இது நல்ல பலனளிக்கும் பட்சத்தில் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.