விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு – இஸ்ரோ சிவன் வரவேற்பு!

 

விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு – இஸ்ரோ சிவன் வரவேற்பு!

நாட்டில் பல்வேறு துறைகளில் தனியாரை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தது. அவற்றில் விண்வெளி துறையும் ஒன்று. மத்திய அரசின் இம்முடிவுக்கு நாடு முழுவதும் வரவேற்பும் எதிர்ப்பும் கலந்த விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் அரசின் இம்முடிவை இஸ்ரோ சிவன் வரவேற்றிருக்கிறார்.

“அரசின் இந்த முடிவால் தனியார் துறையினர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்குத் தேவையான செயற்கைக்கோள் மற்றும் ராகெட்டுகள் உட்பட மற்ற சேவைகளைச் செய்யலாம். தனியார் நிறுவனங்களோடு இணைந்ந்து இஸ்ரோ வேலை செய்ய வேண்டியிருக்கும்.” என்று கூறியுள்ளார்.

விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு – இஸ்ரோ சிவன் வரவேற்பு!

தனியார் இஸ்ரோவுடன் சேர்வதல் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்ட்டத்திற்கு தேவையான முதலீட்டையும் சேவையையும் பெற முடியும். தனியர் நிறுவனங்களால் இஸ்ரோவுக்குப் புதிய டெக்னிக்கல் வசதிகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனுமதியையும் சமீபத்தில் மத்திய அரசு அளித்திருந்தது.

“மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த மாற்றம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இதனால், பல புதிய கண்டுபிடிப்புகளுடன் காத்திருக்கும் இளைஞர்கள் இதைப் பயன்படுத்த முனைவார்கள். ஏற்கெனவே பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. உலகளவில் விண்வெளி பொருளாதாரத்திற்கான முக்கியமான மையமாக இந்தியா விளங்கும் என்று நம்புகிறோம். தனியார் பங்களிப்பில் உலகளவில் தொழில்நுட்ப சக்தியாக இந்தியாவை மாற்ற அழைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் இஸ்ரோ தலைவர் சிவன்.