“இந்த ஆண்டின் முதல் ராக்கெட்” விண்ணில் பாய்ந்தது PSLVC-49!

 

“இந்த ஆண்டின் முதல் ராக்கெட்” விண்ணில் பாய்ந்தது PSLVC-49!

நடப்பாண்டின் முதல் ராக்கெட்டாக PSLVC 49ஐ விண்ணில் ஏவியது இஸ்ரோ.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இ.ஓ.எஸ். 01 என்ற செயற்கை கோள், PSLVC 49 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. புவி கண்காணிப்பு பணிக்காக உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படவிருந்த நிலையில், 10 நிமிட தாமதத்திற்கு பிறகு 3.12 மணிக்கு ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.

“இந்த ஆண்டின் முதல் ராக்கெட்” விண்ணில் பாய்ந்தது PSLVC-49!

இந்த நிலையில், PSLVC 49 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. கொரோனா பாதிப்புக்கு இடையே இந்தாண்டின் முதல் ராக்கெட்டாக PSLVC 49ஐ விண்ணில் ஏவியிருக்கிறது இஸ்ரோ.

“இந்த ஆண்டின் முதல் ராக்கெட்” விண்ணில் பாய்ந்தது PSLVC-49!

அனைத்து சூழலிலும் படங்கள் எடுக்கும் சின்தடிக் அபர்ச்சர் ரேடார் தொழில் நுட்பத்துடன் இ.ஓ.எஸ். 01 இருப்பதாகவும் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைக்கோள்கள் அதில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்கா, லக்சம்பர்க்கின் தலா 4, லூதியானவின் ஒரு செயற்கைக் கோள்களையும் விண்ணில் ஏவியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.