இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு!

 

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு!

தமிழகத்தை சேர்ந்த சிவன் கடந்த 2018 ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், இஸ்ரோவுக்கு வருவதற்கு முன் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்தார்.

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு!

சென்னை எம்ஐடியில் 1980 ஆம் ஆண்டு ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் முடித்து, 1982 ஆம் ஆண்டு பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்இ பட்டமும், மும்பை ஐஐடியில் முனைவர் பட்டமும் பெற்றவர் சிவன், 1982-ல் ‘இஸ்ரோ’வில் பிஎஸ்எல்வி திட்டத்தில் சிவன் முக்கிய பங்காற்றினார். அறிவியல் சேவைக்காக இவருக்கு 2014 ஆம் ஆண்டுசென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்தது, இதேபோல் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் வென்றவர் சிவன்.

இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ஜன.14ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், 2022 ஜனவரி 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.