கொரோனா தடுப்பூசியை முதல் ஆளாகப் போட்டுக்கொண்ட பிரதமர் இவர்தான்!

 

கொரோனா தடுப்பூசியை முதல் ஆளாகப் போட்டுக்கொண்ட பிரதமர் இவர்தான்!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 71 லட்சத்து 72 ஆயிரத்து 352 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 40 லட்சத்து 89 ஆயிரத்து 674 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 99 ஆயிரத்து 644 பேர். அதன் பின்னான அப்டேட் 497 பேர் அடுத்து மரணம் அடைந்துள்ளன. அவற்றையும் சேர்த்தால் 17 லட்சத்தைக் கடந்து விட்டது.

கொரோனா தடுப்பூசியை முதல் ஆளாகப் போட்டுக்கொண்ட பிரதமர் இவர்தான்!

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,13,83,034 பேர். இதனால் கொரோனா தடுப்பூசி மட்டுமே வைரஸ் பரவலைத் தடுக்க உதவும் என்ற முடிவுக்கு எல்லா நாடுகளும் வந்துவிட்டன.

அமெரிக்கா, பிரிட்டன், சவுதி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்தும் பணி தொடங்கி விட்டது. ஆயினும், பிரேசில் நாட்டு அதிபர் கொரோனா தடுப்பூசி பற்றி பல சந்தேகங்களை எழுப்பினார். இதனால், மக்களுக்குத் தடுப்பூசிப் போட்டுக்கொள்வதில் சில தயக்கங்கள் வந்தன.

மக்களின் தயக்கங்களை உடைக்கும் விதமாக, இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நெதன்யாகு, நாட்டிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை தனக்குச் செலுத்திக்கொண்டார்.

கொரோனா தடுப்பூசியை முதல் ஆளாகப் போட்டுக்கொண்ட பிரதமர் இவர்தான்!

70 வயதைக் கடந்த இஸ்ரேல் பிரதமரின் இந்தச் செயல் அந்நாட்டு மக்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டில் அமெரிக்க நிறுவனமான ஃபைசர் கொரோனா தடுப்பூசியே மக்களுக்குச் செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதையேத்தான் பிரதமரும் போட்டுக்கொண்டார்.

இஸ்ரேல் நாட்டில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 3,76,356. இதில் 3,48,266 பேர் குணமடைந்து விட்டனர். 3,101 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.