பாலஸ்தீனம் மீது மீண்டும் தாக்குதல்… போருக்கு அழைக்கிறதா இஸ்ரேல்?

 

பாலஸ்தீனம் மீது மீண்டும் தாக்குதல்… போருக்கு அழைக்கிறதா இஸ்ரேல்?

கிழக்கு ஜெருசலேம் என்ற நிலப்பரப்புக்காக நீண்ட ஆண்டுகளாக இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சண்டை செய்து வருகின்றன. இரு பிரிவினருக்கும் அவ்வப்போது மோதல் வெடிப்பதும் பின்னர் அமைதி காப்பதும் வாடிக்கையாகிப் போனது. ஆனால் இந்த முறை வெடித்த மோதலானது 2014ஆம் ஆண்டு காஸாவில் நிகழ்ந்த போரை நினைவுப்படுத்துவதாகக் கூறப்பட்டது. கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவத்தினர் காசா, மேற்குக் கரை பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் 200க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

பாலஸ்தீனம் மீது மீண்டும் தாக்குதல்… போருக்கு அழைக்கிறதா இஸ்ரேல்?

அதற்குப் பதிலாக காஸாவிலிருந்து ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் தொடுத்தனர். இரு தரப்பு மோதிக் கொண்டாலும் பாதிப்பு என்னவோ பாலஸ்தீனர்களுக்குத் தான் அதிகம். ஆம் இதுவரை நடந்த தாக்குதலில் 217 பாலஸ்தீனர்களும் 12 இஸ்ரேலியர்களும் உயிரிழந்திருக்கின்றனர். இச்சூழலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பைத் தடுக்க இருதரப்பு மோதலை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு போர் நிறுத்த உடன்பாடு எடுக்கப்பட்டது.

பாலஸ்தீனம் மீது மீண்டும் தாக்குதல்… போருக்கு அழைக்கிறதா இஸ்ரேல்?

சில நாட்களாக ஜெருசலேமில் அமைதி திரும்பி வந்த நிலையில், மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தொடங்கியிருக்கிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் இஸ்ரேல் ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் மூன்று பாலஸ்தீனர்கள் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். பலியானவர்கள் பாலஸ்தீன பாதுகாப்புப் படையை சேந்தவர்களாவர். இந்த தாக்குதலானது மிகவும் ஆபத்தானது என பாலஸ்தீன அரசு விமர்சித்துள்ளது.