எனக்கு எல்லாம் தனிமைப்படுத்துதல் பொருந்தாது… மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்! – மத்திய அமைச்சர் சதானந்த கவுடா பேச்சு

எனக்கு எல்லாம் தனிமைப்படுத்துதல் பொருந்தாது… மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்! – மத்திய அமைச்சர் சதானந்த கவுடா பேச்சு

டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பிய மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, தனக்கு எல்லாம் தனிமைப்படுத்துதல் பொருந்தாது, என்னை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. அரசுகள் பல தளர்வுகள் அளித்ததால் இது ஊரடங்கு போல இல்லை என்றாலும், ஊரடங்கு பெயரளவில் உள்ளது. நாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்பவர் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஏராளமான கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ளன.
இந்த நிலையில் இன்று டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா வந்தார். தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறி அவர் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, “நடைமுறையில் அரசு வழிகாட்டுதல்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும். ஆனால் சில நபர்கள், குறிப்பாக பொறுப்பான பதவிகளில் உள்ளவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு உண்டு. நான் மத்திய அமைச்சர். மருத்தக அமைச்சகத்தை கவனித்து வருகிறேன். நாடு முழுக்க தேவையான மருந்துகள் சென்று சேர்கின்றனவா என்பதை உறுதிபடுத்த வேண்டியது என்னுடைய பொறுப்பு. இதில் பிரச்னை ஏற்பட்டால் அது அரசின் தோல்வியல்லவா… நான் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் இதை எல்லாம் யார் செய்வார்கள். எனவே, என்னை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்” என்றார்.எனக்கு எல்லாம் தனிமைப்படுத்துதல் பொருந்தாது… மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்! – மத்திய அமைச்சர் சதானந்த கவுடா பேச்சு
டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பிய மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, தனக்கு எல்லாம் தனிமைப்படுத்துதல் பொருந்தாது, என்னை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. அரசுகள் பல தளர்வுகள் அளித்ததால் இது ஊரடங்கு போல இல்லை என்றாலும், ஊரடங்கு பெயரளவில் உள்ளது. நாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்பவர் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஏராளமான கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ளன.
இந்த நிலையில் இன்று டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா வந்தார். தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறி அவர் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, “நடைமுறையில் அரசு வழிகாட்டுதல்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும். ஆனால் சில நபர்கள், குறிப்பாக பொறுப்பான பதவிகளில் உள்ளவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு உண்டு. நான் மத்திய அமைச்சர். மருத்தக அமைச்சகத்தை கவனித்து வருகிறேன். நாடு முழுக்க தேவையான மருந்துகள் சென்று சேர்கின்றனவா என்பதை உறுதிபடுத்த வேண்டியது என்னுடைய பொறுப்பு. இதில் பிரச்னை ஏற்பட்டால் அது அரசின் தோல்வியல்லவா… நான் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் இதை எல்லாம் யார் செய்வார்கள். எனவே, என்னை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்” என்றார்.