புலம்பெயரும் தொழிலாளர்களை தனிமைப்படுத்துதல் கட்டாயம்: கேரள அரசு அறிவிப்பு!

 

புலம்பெயரும் தொழிலாளர்களை தனிமைப்படுத்துதல் கட்டாயம்: கேரள அரசு அறிவிப்பு!

பிற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வரும் தொழிலாளர்களை 14 நாட்கள் முறையாக தனிமைப்படுத்த வேண்டும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் மக்கள் அனைவரையும் பரிசோதித்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்ற விதிமுறையை எல்லா மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. அந்த பரிசோதனையின் போது, கொரோனா உறுதியானால் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். அந்த வகையில், தற்போது ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் புலம் பெயரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

புலம்பெயரும் தொழிலாளர்களை தனிமைப்படுத்துதல் கட்டாயம்: கேரள அரசு அறிவிப்பு!

அதில், வெளிமாநில தொழிலாளர்கள் கேரளாவுக்கு வரும் போது செய்யப்படும் பரிசோதனையில் கொரோனா உறுதியாகி அறிகுறி ஏதும் இல்லை என்றால் அவர்களை பணிபுரிய அனுமதிக்கலாம் என்றும் அவர்கள் மற்ற தொழிலாளர்களுடன் சேராமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் பணிபுரியலாம் என்றும் தெரிவித்திருந்தது.

புலம்பெயரும் தொழிலாளர்களை தனிமைப்படுத்துதல் கட்டாயம்: கேரள அரசு அறிவிப்பு!

இந்த நிலையில், புலம் பெயரும் தொழிலாளர்களுக்கான அந்த உத்தரவை திரும்பப்பெறுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அதாவது, பிற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களா கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்றும் இதற்கான முழு விதிமுறைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் GAD செயலாளர் சத்யஜீத் ராஜன் அறிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா அதிகமாக பரவுவதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பொருட்டு இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.