தை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டா… இல்லையா?

 

தை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டா… இல்லையா?

உங்கள் வாட்ஸப் செய்திகளில் பலரும் ‘பொங்கல் வாழ்த்து’களை அனுப்பி வருவார்கள். சிலர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்றும் அனுப்பி இருப்பார்கள். அதைப் பார்த்ததும் சித்திரை ஒன்றுதானே தமிழ்ப் புத்தாண்டு… ஏன் இப்போது அனுப்புகிறார்கல் என்ற கேள்வி எழுந்திருக்கும். அது குறித்து பார்ப்போம்.

தை மாதம் என்பது அறுவடை மாதம். விவசாயத்தை பெரும்பான்மையான தமிழர்கள் ஆதித் தொழிலாகக் கொண்டு வாழும் நிலமான தமிழகத்தில் தை மாதமே பிரதானமானது. பொங்கல் விழாக்கூட விவசாயத்தை காக்கும் சூரியனும் நிலத்திற்கும் மாடுகளுக்கும் நன்றி சொல்லும் விதமாகவே உருவானது.

தை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டா… இல்லையா?

சரி, சித்திரை 1-ம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு எனக் கொண்டாடப்பட்டது. 2006 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற மு.கருணாநிதி, அடுத்த இரண்டு ஆண்டுகைல் தமிழக சட்டசபையில் ‘தை மாதம் முதல் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு’ என்ற தீர்மானத்தை இயற்றினார். அதற்கு அப்போதைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவும் அனுமதி அளிக்க அதுவே அரசு சட்டமாகாவும் நடைமுறையாகவும் மாறியது.

தமிழ் மொழியிலும் பண்பாட்டிலும் ஆழ்ந்த சிந்தனை கொண்ட தமிழறிஞரான மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவர். அவர் தலைமையில் திரு. வி.க, கி.ஆ.பெ. விஸ்வநாத, சோமந்தரபாரதி உள்ளிட்ட பெரும் தமிழஞர்கள் ஒன்றுகூடி தை மாதம் 1-ம் தேதி புத்தாண்டு என முடிவெடுத்தனர். இதற்கான ஆதாரங்களை தமிழ் இலக்கியத்திலிருந்து காட்டினர்.

தை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டா… இல்லையா?

இவற்றையெல்லாம் மேற்கோள் காட்டியே மு.கருணாநிதி சித்திரை ஒன்று என இருந்த தமிழ்ப்புத்தாண்டை தை முதல் தேதிக்கு மாற்றினார்.

ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெ.ஜெயலலிதா இந்த மாற்றத்தை உடைத்தார். “தை 1-ம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஆதாரம் இல்லை. கருணாநிதி தன் விளம்பரத்திற்காக இதைச் செய்தார்’ என்று மீண்டும் தமிழ்ப் புத்தாண்டை சித்திரை 1-ம் தேதிக்கே மாற்றினார்.

தை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டா… இல்லையா?

சித்திரை ஒன்றுதான் புத்தாண்டு என்பவர்கள், அறுபது ஆண்டுகளின் பெயர்களில் சமஸ்கிருதம் இருப்பதைச் சொல்வார்கள். அதே காரணத்தை மாற்றிச் சொல்கிறார்கள் தை ஒன்றாம் தேதி என்பவர்கள். அதாவது 60 மாதங்களில் ஒன்றுகூட தமிழில் இல்லை. அதனால் சித்திரை ஒன்று என்பதை நாம் கொண்டாட வேண்டியதில்லை என்கிறார்கள்.

மலேசிய நாட்டில் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாக தை ஒன்றாம் தேதியையே கொண்டாடி வருகிறார்கள்.

இந்தச் சர்ச்சை என்றைக்கும் தீராதது. இரு தரப்பில் எது உங்களுக்கு சரியானது என்று தோன்றுகிறதோ… அதை நீங்கள் கடைபிடியுங்கள்.