darbar
  • January
    28
    Tuesday

Main Area

Main



பாகிஸ்தானிலிருந்த மர்ம தீவு கடலில் மூழ்கியது!

Nasa
Nasa

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உருவான சிறிய தீவு கடலில் மூழ்கியுள்ளதாக நாசாவின் செயற்கைக் கோள் படங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் க்வாதார் துறைமுகத்திற்கு அருகே ஏற்பட்ட 7 புள்ளி 7 ரிக்டர் நிலநடுக்கத்தில் 825 பேர் உயிரிழந்தன அப்போது கடலுக்கடியில் ஏற்பட்ட அதிர்வுகளால் வாயு வெளியேறி சிறிய தீவு உருவானது. 

ஸல்ஸலா கோ என பெயரிடப்பட்ட அந்த தீவில் சேறு மற்றும் வாயுக்கள் எரிமலை போல் பொங்கி வந்ததை பலரும்  பார்த்து ஆச்சர்ய பட்டுள்ளனர். அதற்கு அருகிலிருந்த மீன்கள் அனைத்து எரிமலைப்போல் வந்த சேற்றில் சிக்கி உயிரிழந்தன. இந்நிலையில் நிலநடுக்கத்தால் உருவான அந்த தீவு தற்போது  கடலில் மூழ்கியுள்ளது. நாசா வெளியிட்ட செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.