“கோவையில் அமைதி நிலவ நடவடிக்கை தேவை”- ஆட்சியரிடம், இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை

 

“கோவையில் அமைதி நிலவ நடவடிக்கை தேவை”- ஆட்சியரிடம், இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை

கோவை

கோவையில் அமைதியான சூழல் நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம், இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த 31ஆம் தேதி கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, இஸ்லாமியர் நடத்திய கடையின் மீது பாஜகவினர் கல்வீசி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள், கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

“கோவையில் அமைதி நிலவ நடவடிக்கை தேவை”- ஆட்சியரிடம், இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை

அந்த மனுவில், யோகி ஆதித்யாநாத் பிரசாரத்தின் போது கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள கடைகளை அடைக்க கூறி தங்களுக்கு பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் மிரட்டல் விடுத்ததுடன், வன்முறையில் ஈடுபட முயன்றதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இது கோவையில் பதற்றமான சூழல் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள இஸ்லாமிய அமைப்புகள், அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வரும் கோவையில் கலவரங்களை தூண்டும் விதத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்து உள்ளனர்.