காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம்….. அங்கு ஜிஹாத்தில் ஈடுபடமாட்டோம்…. தெளிவுப்படுத்திய தலீபான்கள்….

 

காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம்….. அங்கு ஜிஹாத்தில் ஈடுபடமாட்டோம்…. தெளிவுப்படுத்திய தலீபான்கள்….

கடந்த சில தினங்களுக்கு முன் தலீபான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஸாபிஹுல்லா முஜாஹித் அளித்த பேட்டி ஒன்றில், காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாதவரை இந்தியாவுடன் நட்பு கொள்வது சாத்தியமில்லை. காபூலில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, சமயநம்பிக்கை அற்றவர்களிடமிருந்து காஷ்மீரையும் கைப்பற்றுவோம் என தெரிவித்ததாக தெரிகிறது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் இதுதொடர்பான பதிவுகள் அதிகரித்ததை சமூக ஊடகங்களை கண்காணிக்கும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதனையடுத்து இந்தியா மற்றும் ஜம்மு அண்டு காஷ்மீர் தொடர்பான தலீபான் அணுகுமுறை பற்றிய அறிக்கைகளை உறுதிப்படுத்த ரகசிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம்….. அங்கு ஜிஹாத்தில் ஈடுபடமாட்டோம்…. தெளிவுப்படுத்திய தலீபான்கள்….

இதன் எதிரொலியாக, காஷ்மீரில் ஜிஹாத்தில் தலீபான் சேர இருப்பதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவல் தவறானது என தலீபான் பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவாக தன்னை கூறிகொள்ளும் ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகம் விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகத்தின் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் டிவிட்டரில் பதிவு செய்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

காஷ்மீரில் ஜிஹாத்தில் தலீபான் இணையபோவதாக சமூக வலைதளத்தில் வெளியான அறிக்கை தவறானது. இஸ்லாமிய அமீரகத்தின் கொள்கை மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பதை தெளிவுப்படுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். ஆக, காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதை தலீபான்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.