யாரு முதல்ல… யாரு கடைசி? ISL கால்பந்து பாயிண்ட் டேபிள் நிலவரம்

 

யாரு முதல்ல… யாரு கடைசி? ISL கால்பந்து பாயிண்ட் டேபிள் நிலவரம்

கிரிக்கெட் விளையாட்டுக்கு ஐபிஎல் போல, கால்பந்து விளையாட்டுக்கு ஐ.எஸ்.எல். நவம்பர் 20 -ம் தேதி தொடங்கிய இந்த கால்பந்து திருவிழா ஒவ்வொரு நாளின் மாலை நேரத்தையும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றி விட்டது. இன்று சென்னை மோதும் போட்டி நடக்க விருக்கிறது.

இதுவரை நடந்திருக்கும் போட்டிகளின் அடிப்படையில் பாயிண்ட் டேபிளில் யார் முதலில் இருக்கிறார்கள்…. யார் பிந்திருயிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

யாரு முதல்ல… யாரு கடைசி? ISL கால்பந்து பாயிண்ட் டேபிள் நிலவரம்

முதல் இடத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வருகிறது மும்பை சிட்டி அணி. இது 7 போட்டிகளில் ஆடி, 5-ல் வென்று, ஒன்றில் தோற்றும், ஒன்றை ட்ராவாக்கி 16 புள்ளிகளோடு முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

இரண்டாம் இடத்தில் ATK mohun bagan அணி. இதுவும் 7 போட்டிகளில் ஆடி, 5-ல் வென்று, ஒன்றில் தோற்றும், ஒன்றை ட்ராவாக்கி 16 புள்ளிகள் எடுத்திருக்கிறது. ஆனால், கோல்கள் குறைவு என்பதால் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

மூன்றாம் இடம் ஜாம்ஷெட்பூர் அணிக்கு. இது 9 போட்டிகளில் ஆடி, 3-ல் வென்று, நான்கில் தோற்றும், இரண்டை ட்ராவாக்கி 13 புள்ளிகளோடு மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

யாரு முதல்ல… யாரு கடைசி? ISL கால்பந்து பாயிண்ட் டேபிள் நிலவரம்

நான்காம் இடத்தில் பெங்களூரு அணி இருக்கிறது. இது 8 போட்டிகளில் ஆடி, 3-ல் வென்று, இரண்டில் தோற்றும், இரண்டில் ட்ராவாக்கி 12 புள்ளிகளோடு நான்காம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

ஐந்தாம் இடத்தில் North Esat united அண் உள்ளது. இது 8 போட்டிகளில் ஆடி, 2-ல் வென்று, ஒன்றில் தோற்றும், ஐந்தை ட்ராவாக்கி 11 புள்ளிகளோடு ஐந்தாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

11 புள்ளிகளோடு ஆறாம் இடத்தில் கோவா அணி இடம்பெறுகிறது. இது 3 போட்டிகளில் வென்றிருக்கிறது.

யாரு முதல்ல… யாரு கடைசி? ISL கால்பந்து பாயிண்ட் டேபிள் நிலவரம்

ஏழாம் இடத்தில் சென்னை இருக்கிறது. இதன் புள்ளிகள் 9. எட்டாம் இடத்தில் உள்ள ஹைதராபாத் அணியின் புள்ளிகள் 9.

ஒன்பதாம் இடத்தில் உள்ளது கேரளா ப்ளாஸ்டர்ஸ். இதன் புள்ளிகள் 6. பத்தாம் இடத்தில் உள்ளது ஈஸ்ட் பெங்கால் இதன் புள்ளிகள் 3.

கடைசி இடமான 11 -ம் இடத்தில் உள்ளது ஒடிஷா. இது 7 போட்டிகளில் ஆடி ஒன்றில்கூட வெல்ல வில்லை. இரண்டு போட்டிகளை ட்ராவாக்கியதால் 2 புள்ளிகள் பெற்றிருக்கிறது.