கோல் மழை பெய்த பெங்களூரூ vs கேரளா போட்டி – இது ISL கால்பந்து திருவிழா

 

கோல் மழை பெய்த பெங்களூரூ vs கேரளா போட்டி – இது ISL கால்பந்து திருவிழா

கோவாவில் நடைபெறும் ISL கால்பந்து திருவிழாவில் தினசரி பரபரப்பான போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்று இரண்டு போட்டிகள் நடந்தன.

முதல் போட்டியில் சென்னை அணியோடு மோதியது NorthEast United அணி. இதில் இரு அணிகளும் கடைசி நிமிடம் வரை கோல் அடிக்காததால் டையில் முடிந்தது ஆட்டம்.

இரண்டாம் போட்டி பெங்களூரு அணிக்கும் கேரள அணிக்கும் என்றிருந்தது. இது முதல் போட்டி போல அல்லாமல் கோல் மழையாக பொழிந்தது.

கோல் மழை பெய்த பெங்களூரூ vs கேரளா போட்டி – இது ISL கால்பந்து திருவிழா

முதல் கோலை ஆட்டத்தின் 17 வது நிமிடத்தில் கேரள அணியில் ராகுல் அடித்தார். அதற்கு பதிலாக 29 வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சில்வா அடித்தார். மீண்டும் பெங்களூரு தரப்பில் Erik paartalu ஒரு கோலை அடிக்க, 61 நிமிடத்தின் கேரளாவின் ஜோர்டன் மர்ரி ஒரு கோல் அடித்தார்.

அதற்கு அடித்து பெங்களூரு அணியின் டிமாஸ் மற்றும் சுனில் கோல்களை அடித்து அசத்தினார்கள். அதற்குப் பிறகு கேரளா அணியால் கோல் ஏதும் போட வில்லை. ஆட்டத்தில் போடப்பட்ட 6 கோல்களில் 4 பெங்களூரு அணியால் போடப்பட்டவை. எனவே அசத்தலான வெற்றியைப் பெற்று பாயிண்ட் டேபிளில் முன்னேறியது.

கோல் மழை பெய்த பெங்களூரூ vs கேரளா போட்டி – இது ISL கால்பந்து திருவிழா

தற்போதைய நிலவரப்படி பெங்களூரூ அணி 5 போட்டிகலில் ஆடி, 2-ல் வென்று மூன்றில் டிராவாக்கி 9 புள்ளிகளோடு 4-ம் இடத்தில் உள்ளது.

கேரளா அணியோ 5 போட்டிகலில் ஆடி, ஒன்றிலும் வெற்றி பெற வில்லை. மேலும் இரண்டில் தோற்று, மூன்றில் டிராவக்கி 2 புள்ளிகளோடு 9-ம் இடத்தில் உள்ளது. இதற்கும் கீழ்தான் ஒடிசாவும் ஈஸ்ட் பெங்கால் அணியும் இருக்கின்றன.