• November
    13
    Wednesday

Main Area

Main



ஐசரி கணேசன் மீது வழக்கு தொடர்ந்த நீதிபதி: அதிர வைக்கும் காரணம்!

ஐசரி கணேசன்
ஐசரி கணேசன்

சென்னை: நடிகர் சங்க தேர்தல் வழக்கில் நீதிபதியின் தீர்ப்பில் தலையிட முற்பட்டதாக ஐசரி கணேசன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது

vishal

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 23 ஆம்  தேதி  நடந்து முடிந்தது. முன்னதாக  இந்தத் தேர்தல் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். 

hc

இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மீது  வழக்கின் தீர்ப்பில் தலையீடு செய்ய முயன்றதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.  இதுதொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள ஆணையில்,  நான் வேலூர் சென்றிருந்த நிலையில் அனந்தராமன் என்பவர் என்னை தொடர்பு கொண்டு ஐசரி கணேசன் மிகவும் வேண்டியவர். அதனால் தேர்தலை 2 அல்லது மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு நான் பதிலிலேதும்  கூறாமல் போனை வைத்துவிட்டேன் . இதன்பின்னர் தான்  அனந்தராமன் என்னுடைய வீட்டிலிருந்துதான் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார் என்பதை எனது மனைவியின் மூலம் அறிந்துகொண்டேன். இதன் மூலம் என்னுடைய வழக்கின் தீர்ப்பில் தலையிடவே அவர்கள் இவ்வாறு முயன்றுள்ளது எனக்குத் தெளிவாக புரிந்தது. அதனால்  நானே முன்வந்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன் ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.