இந்தியா vs இலங்கை ஒருநாள்: ‘இளங்காளை’ இஷான் கிஷான்… ‘மேன் ஆப் மிடில் ஆர்டர்’ சூர்யகுமாரின் அறிமுகமாகிறார்கள்!

 

இந்தியா vs இலங்கை ஒருநாள்: ‘இளங்காளை’ இஷான் கிஷான்… ‘மேன் ஆப் மிடில் ஆர்டர்’ சூர்யகுமாரின் அறிமுகமாகிறார்கள்!

முழுக்க முழுக்க மூத்த வீரர்களை மட்டுமே கொண்ட ஒரு இந்திய அணி ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதேபோல ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களைக் கொண்ட மற்றொரு இந்திய அணி இம்மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட இரு தொடர்களில் பங்கேற்கிறது.

இந்தியா vs இலங்கை ஒருநாள்: ‘இளங்காளை’ இஷான் கிஷான்… ‘மேன் ஆப் மிடில் ஆர்டர்’ சூர்யகுமாரின் அறிமுகமாகிறார்கள்!

அனைத்துப் போட்டிகளும் கொழும்புவில் உள்ள பிரேமதசா மைதானத்தில் நடைபெறுகின்றன. அஆணியை மூத்த வீரர் ஷிகர் தவான் தலைமை தாங்குகிறார். துணை கேப்டனாக புவனேஸ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இளம் அணிக்கு முன்னாள் ஜாம்பாவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பிசிசிஐ நியமித்துள்ளது. இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. தற்போது இலங்கை அணி டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் ஐபிஎல்லில் ஜொலித்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளனர். இது அவர்களுக்கு முதல் போட்டி.

Image

அணி விவரங்கள்:

இலங்கை – அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா (விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷானகா (கேப்டன்), வாணிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, இசுரு உதனா, துஷ்மந்தா சாமிரா, லக்‌ஷன் சந்தகன்

இந்தியா – ஷிகர் தவான், பிரித்வி ஷா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், தீபக் சஹர், புவனேஸ்வர் குமார், சஹால்