பாரம்பர்ய மருந்துகளில் ரத்த சோகையை குணப்படுத்தும் ஈஷா!

 

பாரம்பர்ய மருந்துகளில் ரத்த சோகையை குணப்படுத்தும் ஈஷா!

கோவை

ஆயுஷ் அமைச்சத்துடன் இணைந்து ஈஷா யோகா மேற்கொண்டுவரும் கிராம புற மருத்துவ சேவை மூலம், ரத்த சோகை நோயில் இருந்து 489 பேர் மீண்டுள்ளனர்.

இது தொடர்பாக ஈஷா வெளியிட்டுள்ள செய்தியில், கிராமப் புத்துணர்வு இயக்கம் மூலம் விவசாய கூலி தொழிலாளிகள், மலைவாழ் மக்கள், பெண்கள் உட்பட 489 பேர் ரத்த சோகை நோயில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

பாரம்பர்ய மருந்துகளில் ரத்த சோகையை குணப்படுத்தும் ஈஷா!

கோவை அடுத்த, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் சார்பில் பல ஆண்டுகளாக மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.


இதன் ஒரு பகுதியாக, மத்திய ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து இக்கரைப்போளூவாம்பட்டி, நரசீபுரம், தேவராயபுரம், பேரூர் செட்டிப்பாளையம் உள்ளிட்ட 10 கிராமங்களில் ’ஆயுஷ் – ஈஷா பாரம்பரிய நலவாழ்வு திட்டம்’ என்ற பெயரில் ஒரு மருத்துவ திட்டம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பாரம்பர்ய மருந்துகளில் ரத்த சோகையை குணப்படுத்தும் ஈஷா!

ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், 49 கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. பரிசோதனைகளில் 654 பேருக்கு ரத்த சோகை இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துகள் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வந்தன. 48 நாட்களுக்கு ஒரு முறை அவர்களின் ஹீமோகுளோபின் அளவு தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர்களில் 489 பேர் ரத்த சோகை நோயில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளனர்.

பாரம்பர்ய மருந்துகளில் ரத்த சோகையை குணப்படுத்தும் ஈஷா!

ரத்த சோகை தவிர்த்து, காய்ச்சல், தலைவலி, கை, கால் மற்றும் மூட்டு வலி, மாதவிடாய் பிரச்சினைகள், வயிறு தொடர்பான கோளாறுகள் போன்றவற்றை தீர்ப்பதற்கும் 20 கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் ’ஆயுஷ் சேவக்’ என்ற பெயரில் ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டு மருந்துகள் அளிக்கப்பட்டதாகவும் ஈஷா கூறியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், பள்ளி குழந்தைகள், மகளிர் உட்பட 10 ஆயிரம் பேருக்கு இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இத்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தியதை அடுத்து, 10 கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம பிரமுகர்கள் கலந்து கொண்டு ரத்த சோகையில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை வழங்கினர்.