ஈஷாவின் உதவியால் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டிய பழங்குடி பெண்கள்!

 

ஈஷாவின் உதவியால் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டிய பழங்குடி பெண்கள்!

ஈஷா மையத்தின் உதவியால் சுய தொழில் மூலம் ரூ.64 லட்சம் turn over ஈட்டிய பெண்களின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் அப்பெண்களுக்கு ரூ. 23 லட்சம் லாபமாக கிடைத்துள்ளது.

ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை ஈஷா செய்துவருகிறது. குறிப்பாக பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை ஈஷா செயல்படுத்திவருகிறது.

ஈஷாவின் உதவியால் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டிய பழங்குடி பெண்கள்!

அந்த வகையில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள தாணிகண்டி மலை கிராமத்தை சேர்ந்த 11 பழங்குடியின பெண்கள் ஒன்றிணைத்து ‘செல்லமாரியம்மன் பழங்குடியினர் மகளிர் சுய உதவி குழு’ கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அவர்களுக்கு ஆதியோகி சிலை அருகில் ஒரு பெட்டிக்கடையும், பேட்டரி வண்டியும் ஈஷா மையம் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. குறைந்த முதலீட்டில் சுய தொழில் தொடங்கிய அவர்கள், மூன்றே ஆண்டுகளில் ரூ.64 லட்சம் Turn over செய்து, 23 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளனர். ஈஷா கொடுத்த பேட்டரி வண்டியை மட்டுமே வைத்து தொழில் செய்துவந்த அவர்கள், தற்போது தங்களது சொந்த பணத்தில் ரூ.6 லட்சத்தில் பேட்டரி காரை வாங்கவுள்ளனர்.

அங்குள்ள இடங்களை சுற்றிப்பார்க்க பேட்டரி கார் பயன்படுத்தப்பட்டுவருகிறது. 10 பேரும் அமரும் திறன் கொண்ட அந்த வண்டியில் பயணிக்க ஒருவருக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கின்றனர். அந்த வண்டிக்கு ஈஷாவிலேயே தினமும் இலவசமாக சார்ஜ் போட்டு கொள்கின்றனர். ஏதேனும் சிறு பழுது ஏற்பட்டாலும் கட்டணமின்றி சரி செய்து கொள்கின்றனர். அதேபோல், பெட்டி கடையில் டீ, காபி, குளிர் பானங்கள் மற்றும் சிற்றுண்டி உணவுகள் போன்றவற்றை விற்பனை செய்தும் லாபம் ஈட்டி வருகின்றனர். தின கூலி வேலைக்கு சென்று கஷ்டப்பட்ட பழங்குடி பெண்களை முதலாலாக்கி அழகு பார்த்துள்ளது ஈஷா மையம்.